விடுதலைக் களம் அமைப்பு தொடங்கப்பட்ட நாளில், தொடக்க விழாவில் பங்கேற்ற நமது சமுதாய முன்னோடிகளில் முக்கியமானவரான நாமக்கல் மாவட்டம் திருமலை பட்டி கிராமம், கும்மா நாயக்கனூரை சேர்ந்த தலைமை ஆசிரியர் திரு. பொம்முலு வாத்தியார் அவர்களின் மனைவியும்… பேராசிரியர் B. தேவராஜ், B. தர்மலிங்கம் ஆகியோரின் தாயாருமான திருமதி B. முத்தாயம்மாள் அக்டோபர் 5 ஆம் தேதி இயற்கை எய்தினார்.

இதை ஒட்டி விடுதலைக் களம் கட்சியின் நிறுவனத் தலைவர் கொ. நாகராஜன்… முத்தாயம்மாள் அவர்களின் பூத உடலுக்கு மலர்மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்!












