தமிழ்நாட்டு இளைஞர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. அதன்படி வரும் 2027 ஜனவரி 10 ஆம் தேதி தேர்வு நடைபெற இருக்கிறது.
சுமார் பத்தாயிரம் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்படும் என தகவல்கள் வந்த நிலையில்… பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 6,574 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு அறிவிப்பு அக்டோபர் 6 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இடையில் ஏற்படும் காலியிடங்களைப் பொறுத்து இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
எந்தெந்த பதவிகளுக்கு? எப்போது தேர்வு?
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வனக்காவலர், பில் கலெக்டர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான குரூப் 4 தேர்வு வரும் ஜனவரி 10, 2027 காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடத்தப்படும்.
தேர்வு ஒரே கட்டமாக, கொள்குறி வகை (Objective Type) வினாக்களுடன் நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?
இந்த தேர்வுக்கு 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் வரும் நவம்பர் மாதம் 5 ஆம் தேதி.
விண்ணப்பம் செய்வது எப்படி?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
எந்தெந்த பதவிகள்? எவ்வளவு காலியிடங்கள்?
கிராம நிர்வாக அலுவலர் – 291
வரி தண்டலர் 97
வருவாய் உதவியாளர் 96
இளநிலை உதவியாளர் 3,762
வரி வசூலிப்பவர் 107
நிர்வாக உதவியாளர் 55
தட்டச்சர் 1,572
சுருக்கெழுத்து தட்டச்சர் 404
நேர்முக எழுத்தர் 60
செயல் அலுவலர் 46
வனக்காவலர் 40
விற்பனை உதவியாளர் 10
ஆய்வக உதவியாளர் 23
பதிவுரு எழுத்தர் 19
தகுதிகள் என்ன?
ஒவ்வொரு பதவிக்கும் உரிய வயது வரம்பு, கல்வித் தகுதி ஆகியவை பற்றி அறிய https://www.tnpsc.gov.in இணையதளத்துக்குள் சென்று பார்க்கவும்!












