இனமான தொட்டிய நாயக்க சொந்தங்களுக்கு வணக்கம்…. நான் விடுதலை களம் கட்சியின் நிறுவனத் தலைவர் கொ. நாகராஜன் அழைக்கிறேன்!
அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து வீரப் போர் புரிந்து தன் இன்னுயிர் துறந்த பாஞ்சாலங்குறிச்சி மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 227 ஆவது வீரவணக்க நாள் விழா, வரும் அக்டோபர் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தில் விடுதலைக் களம் கட்சியின் முன்னெடுப்பில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்த விழாவில் தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும் டாக்டர் ஆர். எம். ஆர். பாசறை நிறுவனருமான முனைவர் பா. ராம மோகன ராவ் ஐஏஎஸ் அவர்களும், மற்றும் நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்துக் கட்சி தலைவர்கள், பொறுப்பாளர்கள், விடுதலைக் களம் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள்… மற்றும் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் மூத்த முன்னோடிகள் பங்கேற்று வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்த உள்ளனர்.

நமது மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்திட அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்!
வீரத்தின் விளைநிலத்தில் சந்திப்போம்… மாமன்னர் புகழ் பரப்ப சிந்திப்போம்!












