|
Live

யார் கொடுத்த தைரியம்? கர்நாடக அமைச்சருக்கு வைகோ கண்டனம்!

youtube
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
Live

யார் கொடுத்த தைரியம்? கர்நாடக அமைச்சருக்கு வைகோ கண்டனம்!

  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
Home செய்திகள்

பிசிஆர் சட்டத்தால் பாதிக்கப்படும் பி.சி. எம்.பி.சி, டி.என்.டி. சமூகங்கள்: தீர்வு என்ன?

நிர்வாகி by நிர்வாகி
October 7, 2026
in செய்திகள், முக்கிய செய்திகள்
A A
பிசிஆர் சட்டத்தால் பாதிக்கப்படும் பி.சி. எம்.பி.சி, டி.என்.டி. சமூகங்கள்: தீர்வு என்ன?

-விளக்குகிறார் ஓ.வை. தியாகராஜன்

எஸ்சி.எஸ்டி மக்களின் சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டமான (Protection of Civil Rights) பிசிஆர் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை கண்டித்தும்…  இந்த சட்டத்தால் பி.சி. எம்.பி.சி, டி.என்.டி. மக்கள் கடுமையாக  பாதிக்கப்படுவதை தடுக்கக் கோரியும்  இந்தியா முழுதும் இப்போது பல்வேறு மாநிலங்களில் விழிப்புணர்வு போராட்டங்கள்  அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில் தமிழ்நாட்டிலும் பிசிஆர் சட்டத்தை பெரும்பாலும் தவறாகப் பயன்படுத்துதலை எதிர்த்து  பி.சி, எம்.பி.சி, டி.என்.டி. பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் தொடர்  ஆர்பாட்டங்களும், விழிப்புணர்வு கருத்தரங்கங்களும் நடைபெற்று வருகின்றன.
மாநிலம் முழுதும் இந்த நிகழ்ச்சிகளை நடத்தி வரும் பி.சி, எம்.பி.சி, டி.என்.டி. பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்    ஓ.வை. தியாகராஜன்  அவர்களோடு தொட்டியநாயக்கர் முரசு இணையதளம் சார்பில் உரையாடினோம்.

பிசிஆர் சட்டம் எவ்வாறெல்லாம் தவறாக பயன்படுத்தப்படுகிறது? அதனால், பி.சி, எம்.பி.சி, டி.என்.டி மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்?

தமிழ்நாட்டில் கடந்த 35 வருடங்களாக இந்த பிசிஆர் சட்டத்தின் மூலமாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் டிஎன்டி சீர் மரபினர் ஆகிய பிரிவுகளில் உள்ள பெரும்பான்மை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
எஸ்சி எஸ்டி மக்களின் சிவில் உரிமைகளை பாதுகாப்பதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த சட்டம் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மக்கள் மீது வேண்டுமென்றே தவறாக உள்நோக்கத்தோடு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதுவும் குறிப்பாக பணம் பறிக்கும் நோக்கத்தோடு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்களை  டார்கெட் வைத்து இந்த சட்டம் பாய்ச்சப்படுகிறது.
இதனால் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, டி என் டி சீர் மரபினர் தொழில் நடத்துவதற்கே பயப்படுகிற ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. கொடுக்கல் வாங்கலில் ஏற்படுகிற பிரச்சனைகள்… சொத்து பரிமாற்றத்தில் ஏற்படுகிற பிரச்சனைகள் இவற்றை அந்தந்த சட்டங்களின்படி சந்திக்காமல் பி சி ஆர் சட்டத்தின் கீழ் சென்று ஒளிந்து கொள்கிறார்கள்.

பி சி ஆர் சட்டப்படி எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டு விட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் அளிக்கிறது. இதற்காகவே இந்த சட்டத்தை பெரும்பான்மை மக்கள் மீது தவறாக பயன்படுத்தப்படும் அட்டூழியம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

மூன்றாண்டுகளில் எடுத்த ஆய்வில் 3040 பிசிஆர் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில்… இவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் போலி என கண்டறியப்பட்டு,  குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணை எல்லாம் நடந்து முடிந்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் அதுவரை அவர்கள் அனுபவித்த சிறைவாசம், இதனால் ஏற்பட்ட மன உளைச்சல், சித்திரவதை, பொருளாதார நட்டம் ஆகியவற்றை ஈடு கட்டுவதற்கு எந்த வழியும் இல்லை.

பி சி ஆர் வழக்கு தொடுப்பவர்களுக்கு அரசு நிவாரணம் அளிக்கும்போது… அந்த வழக்கு பொய் வழக்கு என நிரூபிக்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டால், விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு என்ன நிவாரணம்? ஏன் அரசு அவர்களை பாராமுகமாக விட்டு விடுகிறது? பி சி ஆர் வழக்கு தொடுக்கப்பட்டால் வழக்கு நடத்தவே குறைந்தபட்சம் இரண்டரை லட்சம் ரூபாய் செலவாகிறது. இந்த பொருளாதார இழப்பை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, டிஎன்டி சீர்மரபினர் மக்களுக்கு யார் கொடுப்பார்கள்? அரசாங்கம் அல்லவா கொடுக்க வேண்டும்?

இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது  பற்றி நீதிமன்றங்களுக்குத் தெரியாதா?

நல்ல கேள்வி. பிசிஆர் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது பற்றி நீதிமன்றங்கள் நன்கு அறிந்துள்ளன. அதனால்தான்… உச்ச நீதிமன்றத்தின் முக்கிய வழக்கான ‘டாக்டர் சுபாஷ் காஷினாத் மகாஜன் எதிர் மகாராஷ்டிரா மாநிலம்’ (2018)  என்ற வழக்கு இந்த விவகாரத்தில் முக்கியமாக சுட்டிக் காட்டப்பட வேண்டிய வழக்காகிறது.
பிசிஆர் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது  பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல் மற்றும் உதய் உமேஷ் லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பாகவே  2018  மார்ச் 20 ஆம் தேதி அளித்தது. பி.சி, எம்.பி.,சி., டி.என்.டி.மக்களால் இது கோயல் தீர்ப்பு இன்றுவரை கொண்டாடப்படுகிறது.
அதாவது… நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயலால் எழுதப்பட்ட மார்ச் 20, 2018-ஆம் தேதியிட்ட இந்தத் தீர்ப்பு, பிசிஆர்  சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதிலும் தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாப்பதிலும் அதிக கவனம் செலுத்தியது.
SC/ST சட்டத்தின் கீழ் புகார் அளிக்கப்பட்டவுடன் உடனடியாகக் கைது செய்யக்கூடாது,

முதற்கட்ட விசாரணை: புகார் உண்மையானதா அல்லது தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கத்துடன் அளிக்கப்பட்டதா என்பதைச் சரிபார்க்க, சம்பவம் நடந்த 7 நாட்களுக்குள் காவல்துறையினர் கட்டாய முதற்கட்ட விசாரணையை நடத்த வேண்டும். அதில் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே கைது செய்ய வேண்டும்…

அரசு ஊழியராக இருந்தால், அவரைப் பணியில் அமர்த்திய அதாவது மேலதிகாரியிடம் இருந்து எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெற்ற பின்னரே கைது செய்ய முடியும்.

அரசு ஊழியர் அல்லாதவராக இருந்தால், மாவட்டத்தின்  காவல் கண்காணிப்பாளரிடமிருந்து (SP) எழுத்துப்பூர்வ அனுமதி பெற்றே கைது செய்ய வேண்டும்.

புகார் வெளிப்படையாகப் பொய்யானதாகவோ அல்லது உள்நோக்கம் கொண்டதாகவோ (mala fide) நீதிமன்றத்திற்குக் கருதப்பட்டால்,  நீதிமன்றமே முன்ஜாமீன் வழங்கலாம்” என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதி கோயல் அளித்தார்.

ஆனால் கோயல் அளித்த  முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை எஸ்சி,, எஸ்டி மக்களின் வாக்குகளை கருத்தில்கொண்டு… ஒபிசி மக்களின் வாக்குகளை கருத்தில் கொள்ளாமல் நாடாளுமன்றத்துக்கு பெரும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.

நீதிபதி கோயல்  தீர்ப்பின் தாக்கத்தை ரத்து செய்யும் வகையில் நாடாளுமன்றம் ஒரு திருத்தத்தை நிறைவேற்றி, பிசிஆர்  சட்டத்தில் ‘பிரிவு 18A’-ஐ அறிமுகப்படுத்தியது. இப்பிரிவு, ஆரம்பகட்ட விசாரணைக்கான தேவையைத் தெளிவாக நீக்கியதுடன், முன்ஜாமீன் கோருவதற்கான தடையை மீண்டும் அமல்படுத்தியது.  அதாவது சட்டத்தை பழையபடி ஆக்கியது.

மேலும் கோயல் அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிராக  உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதன் விளைவாக 2019 அக்டோபர் 1 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, 2018-ஆம் ஆண்டு தீர்ப்பில் வழங்கப்பட்டிருந்த உத்தரவுகளை அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெற்று ரத்து செய்தது.

இதன் மூலம் பிசிஆர்  சட்டத்தை தவறாக பயன்படுத்துவர்களின் கொட்டம் மேலும் அதிகரித்துவிட்டது, பிசி, எம்.பி.சி., டி.என்.டி. மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளைப் பெற்று எம்பி ஆனவர்கள்தான் பிசிஆர் சட்டத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செல்லாததாக்கிவிட்டனர். இதற்காகவா அவர்களுக்கு நாம் ஓட்டு போட்டு அனுப்பினோம்? அவர்கள் எம்பி ஆவதற்கு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட,  டி.என்.டி. சீர் மரபினரின் வாக்குகள் வேண்டாம் என்று அவர்கள் சொல்லுவார்களா?

இதுபற்றி மக்களிடம் எந்த மாதிரியான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறீர்கள்?

பிசிஆர் சட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, டி.என்.டி. மக்களுக்கு ஏற்பட்டுவரும் பாதிப்புகளை அவர்களைத் தேடிச் சென்று சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.  நமக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற போராட்ட உணர்வை ஓபிசி மக்களிடம்  ஏற்படுத்த பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.  அறவழி ஆர்பாட்டங்களையும், சட்ட ரீதியான போராட்டங்களையும் நடத்தி வருகிறோம்.
கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி  மதுரையில் கருஞ்சட்டை ஆர்பாட்டத்தை நடத்தினோம். இதில் இரண்டாயிரம் பேர் கலந்துகொண்டார்கள்.
அடுத்ததாக அக்டோபர் 11 ஆம் தேதி சேலம்  ஓமலூரிலும், அக்டோபர் 18 ஆம் தேதி திருநெல்வேலியிலும் இதேபோன்ற விழிப்புணர்வு ஆர்பாட்டங்களை பி.சி., எம்.பி.சி, டி.என்.டி. பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நடத்த இருக்கிறோம்.

இப்படி தமிழ்நாடு முழுதும் பல்வேறு மாவட்டங்களில் ஆர்பாட்டங்கள் நடத்தி அதன் பிறகு  வெகு விரைவில் நமது கூட்டமைப்பு சார்பில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மக்கள் கலந்துகொள்ளும் வகையில் பிரம்மாண்டமாக சென்னையில் ஆர்பாட்டம் நடத்த இருக்கிறோம்.

ஏற்கனவே ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இதே கோரிக்கையை வலியுறுத்தி அங்கிருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்கள் போராடி வருகிறார்கள். விரைவில் இந்த தேசிய அளவிலான போராட்டத்திலும் நம்மை இணைத்துக் கொள்வோம்.

இந்த ஆர்பாட்டங்களின் முக்கிய கோரிக்கை என்ன?

பிசிஆர் சட்டத்தை தொடர்ந்து தவறாக பயன்படுத்துவதால்… பிசி,எம்பிசி, டி.என்.டி மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து சட்ட ரீதியான பாதுகாப்பு வேண்டும்! அதற்காக தனி சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

பிசிஆர் சட்டத்தால் பொய் வழக்கு பதியப்பட்டு போராடி விடுதலை ஆனவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். பொய் வழக்கு தொடுத்தவர்கள் மீது  சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  பி.சி., எம்.பி.சி, டி.என்.டி. மக்களுக்கு வாழ்வியல் பாதுகாப்பை உறுதிப்படுத்திட வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களின் அறவழி, சட்ட வழி போராட்டங்கள் தொடரும். நமது இந்த போராட்டம் வரும் தேர்தல்களிலும் கடுமையாக எதிரொலிக்கும்” என்றார் ஓ.வை. தியாகராஜன்.

Previous Post

நகை அடகு வைக்க போறீங்களா? ஒரு நிமிஷம்… உங்களுக்காகவே இந்த நியூஸ்!

Next Post

TNPSC GROUP 4  தேர்வுகள்… 2027 ஜனவரி 10- முழு விவரங்கள் இதோ

  • டிரெண்டிங்
  • கருத்துகள்
  • சமீபத்திய
மலர்ந்தது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம்

மலர்ந்தது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம்

September 15, 2026
வீரபாண்டிய கட்டபொம்மனுக்குமுதல்வர் விஜய் செய்ய வேண்டியது என்ன?

வீரபாண்டிய கட்டபொம்மனுக்குமுதல்வர் விஜய் செய்ய வேண்டியது என்ன?

September 19, 2026
மாணவர்களை சாதிக்க வைத்து சாதனை செய்த ஆசிரியர்

மாணவர்களை சாதிக்க வைத்து சாதனை செய்த ஆசிரியர்

September 17, 2026
பிசிஆர் சட்டத்தால் பாதிக்கப்படும் பி.சி. எம்.பி.சி, டி.என்.டி. சமூகங்கள்: தீர்வு என்ன?

பிசிஆர் சட்டத்தால் பாதிக்கப்படும் பி.சி. எம்.பி.சி, டி.என்.டி. சமூகங்கள்: தீர்வு என்ன?

October 7, 2026
சர்வே FMB தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள்

சர்வே FMB தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள்

0
education

தொட்டிய நாயக்கர் சமூகமும் அவர்களின் கல்வி நிலையும்

0
kattapoman

பராமரிப்பின்றி கட்டபொம்மன் சிலை!

0
திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!

திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!

0
யார் கொடுத்த தைரியம்? கர்நாடக அமைச்சருக்கு வைகோ கண்டனம்!

யார் கொடுத்த தைரியம்? கர்நாடக அமைச்சருக்கு வைகோ கண்டனம்!

October 9, 2026
பொலிவு பெறுமா தளி எத்தலப்ப நாயக்கர் நினைவு அரங்கம்?

பொலிவு பெறுமா தளி எத்தலப்ப நாயக்கர் நினைவு அரங்கம்?

October 9, 2026
TNPSC GROUP 4  தேர்வுகள்… 2027 ஜனவரி 10- முழு விவரங்கள் இதோ

TNPSC GROUP 4  தேர்வுகள்… 2027 ஜனவரி 10- முழு விவரங்கள் இதோ

October 7, 2026
பிசிஆர் சட்டத்தால் பாதிக்கப்படும் பி.சி. எம்.பி.சி, டி.என்.டி. சமூகங்கள்: தீர்வு என்ன?

பிசிஆர் சட்டத்தால் பாதிக்கப்படும் பி.சி. எம்.பி.சி, டி.என்.டி. சமூகங்கள்: தீர்வு என்ன?

October 7, 2026

தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் செய்திகள், வரலாறு, கலை, கலாச்சாரம் மற்றும் நிகழ்வுகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் ஒரு பிரத்யேக தளம்.

Whatsapp Facebook Instagram Youtube
instagram-1.png
facebook-1.png
youtube
முக்கிய இணைப்புகள்
  • எங்களைப் பற்றி
  • சமுதாய செய்திகள்
  • தொட்டிய நாயக்கர் வரலாறு
  • பிரபலங்கள்
  • சாதனையாளர்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
பிற இணைப்புகள்
  • சடங்கு & சம்பிரதாயம்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • சமூகப் பணி
  • பிறந்தநாள் வாழ்த்துகள்
  • திருமண வாழ்த்துகள்
  • இரங்கல் செய்திகள்
தொடர்புக்கு
  • +91 94870 66643
  • rajakambalammurasu@gmail.com
  • #2/48, ஊர்புறம் (வார்டு 2), போடிநாயக்கன்பட்டி (அஞ்சல்), சிங்களாந்தபுரம் (வழி), இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம் - 637 412, தமிழ்நாடு.
© 2026 தொட்டிய நாயக்கர் முரசு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
No Result
View All Result
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்

© 2018 JNews by Jegtheme.