மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலில் 17 வருடங்களுக்குப் பின், கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி மகா கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது.
இதன் பிறகு இப்போது மண்டல அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் இன்னமும் மீனாட்சி அம்மனை வந்து தரிசித்து வருகின்றனர்.
நிலையில் செப்டம்பர் 28 ஆம் தேதி முதலமைச்சர் விஜய் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வருகிறார்.
இந்நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் பிரம்மாண்டமான கோபுரங்கள் மண்டபங்களை கட்டியது யார் என நம் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இதோ அந்த விசேஷ விவரங்கள்…
1168 – 75 -> சுவாமி கோபுரம்
1216 – 38 -> ராஜ கோபுரம்
1627 – 28 -> அம்மன் சந்நிதி கோபுரம்
1315 – 47 -> மேற்கு ராஜா கோபுரம்
1372 -> சுவாமி சந்நிதி கோபுரம்
1374 -> சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம்
1452 -> ஆறு கால் மண்டபம்
1526 -> 100 கால் மண்டபம்
1559 -> சௌத் ராஜா கோபுரம் -> முக்குரிணி விநாயகர் கோபுரம்
1560 -> சுவாமி சந்நிதி நார்த் கோபுரம்
1562 -> தேரடி மண்டபம்
1563 -> பழைய ஊஞ்சல் மண்டபம் -> வன்னியடி நட்ராஜர் மண்டபம்
1564 – 72 -> வடக்கு ராஜா கோபுரம்
1564-72 -> வெள்ளி அம்பல மண்டபம் -> கொலு மண்டபம்
1569 -> சித்ர கோபுரம் -> ஆயிராங்கால் மண்டபம் -> 63 நாயன்மார்கள் மண்டபம்
1570 -> அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம்
1611 -> வீர வசந்தராயர் மண்டபம்
1613 -> இருட்டு மண்டபம்
1623 -> கிளிக்கூட்டு மண்டபம் -> புது ஊஞ்சல் மண்டபம்
1623 – 59 -> ராயர் கோபுரம் -> அஷ்டஷக்தி மண்டபம்
1626 -45 -> புது மண்டபம்
1635 -> நகரா மண்டபம்
1645 -> முக்குருணி விநாயகர்
1659 -> பேச்சியக்காள் மண்டபம்
1708 -> மீனாக்ஷி நாயக்கர் மண்டபம்
1795 -> சேர்வைக்காரர் மண்டபம்
மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டியவர்களும், அந்த கால கட்டத்தில் ஆட்சி புரிந்தவர்களும்:
குலசேகர பாண்டியன் -> 1168 – 75.
மாறவர்மன் சுந்தரபாண்டியன் -> 1216 – 38.
பாராக்ரம பாண்டியன் -> 1315 – 47.
விஸ்வநாத நாயக்கர் -> 1529 – 64.
கிருஷ்ணப்பா நாயக்கர் -> 1564 – 72.
வீரப்ப நாயக்கர் -> 1572 – 94.
கிருஷ்ணப்பா நாயக்கர் -> 1595 – 1601.
முத்துகிருஷ்ணப்பா நாயக்கர் -> 1601 – 09.
முத்து நாயக்கர் -> 1609 – 23.
திருமலை நாயக்கர் -> 1623 – 1659.
ரௌதிரபதி அம்மாள் மற்றும்
தோளிமம்மை -> 1623 – 59. (Wives of ThirumalaiNaicker )
முத்து வீரப்ப நாயக்கர் -> 1659
சொக்கநாத நாயக்கர் -> 1659 – 82.
முத்து வீரப்ப நாயக்கர் -> 1682 – 89.
விஜயரங்க சோகநாத நாயக்கர் -> 1706 – 32.
மீனாட்சி அரசி -> 1732 – 36
இவ்வாறு மதுரை மீனாட்சியம்மன் கோவில் கட்டுமானங்களில் முக்கிய பங்கு வகித்தவர்கள் நாயக்க மன்னர்கள்.
பாண்டிய மன்னர்களும், அவர்களுக்குப் பின் மதுரை ஆண்ட நாயக்க மன்னர்களும் மீனாட்சியம்மனின் கோவில் இன்றைக்கு இவ்வளவு பிரமாண்டமாக அழகாக திகழ்வதற்கு முக்கிய காரணமாக இருக்கிறார்கள்.
வைணவரான திருமலைநாயக்கர், சொக்கநாதர் மீதும் அன்னை மீனாட்சி மீதும் பக்தி கொண்டு செய்த திருப்பணிகள் ஏராளம். திருமலை நாயக்க மன்னரின் ஆளுகையில் மதுரை வந்த பிறகுதான், கோயில் விரிவாக்கம் பெற்று, பொலிவுபெற்றது என, ‘மதுரை திருப்பணி மாலை’ என்ற ஓலைச்சுவடி தெரிவிக்கிறது.
இப்படிப்பட்ட மதுரை மீனாட்சியம்மன் கோவிலை நாமும் தரிசிப்போம். மீனாட்சியம்மனோடு அங்கு இருக்கிற வரலாற்று சிறப்புமிக்க கலை கட்டுமானங்களையும் தரிசிப்போம்.













