இந்திய ரயில்வேயில் துணை மருத்துவ பணியிடங்கள் 590 காலியாக உள்ள நிலையில், இவற்றை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை ரயில்வே வரவேற்கிறது.
இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் நர்சிங் சூப்ரென்டன்ட் 365, பார்மசிஸ்ட் 118, மலேரியா இன்ஸ்பெக்டர் 43, லேப் அசிஸ்டென்ட் 31, எக்ஸ்-ரே டெக்னீசியன் 25, இசிஜி டெக்னீசியன் 4 உட்பட மொத்தம் 590 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இவற்றை நிரப்புவதற்கு ஒவ்வொரு பணியிடத்துக்கும் அதற்குரிய கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நர்சிங் பணியிடங்களுக்கு அகில இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட நர்சிங் கல்லூரியில் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
மருந்தாளுநர் அதாவது பார்மசிஸ்ட் பதவிக்கு பார்மசி பிரிவில் கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். டிஜிஎன்எம்/ பி எஸ் சி நர்சிங் உள்ளிட்ட வகுப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 18 முதல் 40 வரை
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். rrbapply.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் கிடைக்கும்.
பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் 500 ரூபாய். தேர்வு எழுதிய பிறகு 400 ரூபாய் திரும்ப அளிக்கப்படும். எஸ்சி எஸ்டி, மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் 250 ரூபாய். தேர்வு எழுதிய பிறகு முழுவதும் திருப்பி அளிக்கப்படும்.
விண்ணப்பங்களை அனுப்புவதற்கு கடைசி நாள்: அக்டோபர் 14, 2026
தேர்ச்சி முறை: ஆன்லைன் மூலமாக தேர்வு
விண்ணப்பித்து வெற்றிகரமாக தேர்வு எழுதுங்கள். உங்களுக்கு ரயில்வேயில் வேலை கிடைக்க தொட்டிய நாயக்கர் முரசு சார்பாக அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள்.













