|
Live
Engineering Central Government Job

இன்ஜினியரிங் முடித்த இளைஞர்களே… இதோ மத்திய அரசு வேலை வாய்ப்பு!

youtube
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
Live
Engineering Central Government Job

இன்ஜினியரிங் முடித்த இளைஞர்களே… இதோ மத்திய அரசு வேலை வாய்ப்பு!

  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
Home பிரபலங்கள்

சத்தியராஜ் யுவராஜ்

நிர்வாகி by நிர்வாகி
September 12, 2026
in பிரபலங்கள்
A A
சத்தியராஜ் யுவராஜ்

சத்தி பிராய்லர்ஸ்… பொம்மு மசாலா!. ஈர மனசுக் காரர் வெற்றி அடைந்த கதை!

நமது சமுதாய சாதனையாளர்கள் வரிசையில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகில் உள்ள மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சத்தி பிராய்லர்ஸ் உரிமையாளரான சத்தியராஜ் அவர்களை தான் தொட்டிய நாயக்கர் முரசு டாட் காம் வழியாக சந்திக்க இருக்கிறோம். 

2009 ஆம் ஆண்டு ஒரு சின்ன கோழிக் கடையை தனது கிராமத்தில் ஆரம்பித்த சத்யராஜ் இன்று நாமக்கல்  மாவட்டத்திலேயே மிக முக்கியமான  சத்தி பிராய்லர் மொத்த விற்பனையாளராகவும், அதுமட்டுமல்ல பொம்மு மசாலா என்கிற மசாலா பொருள் உற்பத்தி நிறுவனத்தின் அதிபராகவும் உயர்ந்திருக்கிறார்.

சத்தியராஜ் வெற்றி சரித்திரத்தை அவரே சொல்ல கேட்போம்.

“மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த  ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவன் தான் நான்.

அப்பா சுந்தரம் விவசாயி, அம்மா பொம்மாயி அம்மாள். எனக்கு உடன் பிறந்த அண்ணன் யுவராஜ்.

நான் 10 ஆவது படிச்சுட்டு இங்கேயே சின்ன சின்ன கம்பெனிகள்ல சூப்பர்வைசர் வேலை பார்த்தேன். அப்பதான் நாமே ஒரு கடை ஆரம்பிச்சா என்ன அப்படி என்ற எண்ணம் எனக்கு வந்தது. 

கொஞ்சம் கொஞ்சமாக என்னை தயார் படுத்திக்கிட்டு 2009 ஆம் ஆண்டு ஒரு சின்ன கோழிக்கடை ஆரம்பிச்சேன். இங்க பிராய்லர் பிசினஸ் என்கிறது நாமக்கல் மாவட்டத்தில் ரொம்ப ஃபேமஸ். கடந்த  30 வருஷத்துக்கு மேல இங்க இந்த பிசினஸ் அதிகமா நடக்குது. அதனாலேயே எனக்கு அதில் ஆர்வம் ஏற்பட்டது. 

கடை ஆரம்பிச்ச ரெண்டு வருஷத்துல அதாவது 2011 ஆம் வருஷம் அஞ்சு கோழி கம்பெனிகளோட  டீலர் எடுத்தேன். 

எங்கள் குடும்பமே கடைக்காக உழைப்போம். இப்படி உழைத்து எங்களுடைய வரவு செலவு கணக்கை வங்கியிலே காட்டி முறையாக வங்கிக் கடன் வாங்கினோம். அதன் வழியாக இரண்டு சொந்த வண்டிகள் வாங்கினோம்.  சொந்த வண்டிகள் வாங்கி விட்டதால் 50 சில்லறை கடைகளுக்கு கோழி சப்ளை பண்ண ஆரம்பித்தோம்.

2016 ல எங்களுடைய கடைகள் மொத்தம் அஞ்சு பிரான்ச் ஆரம்பித்து விரிவாக்கினோம்.

நம்மிடம் நாமக்கல் மாவட்டத்தில நிறைய ஹோட்டல் காரங்க  சிக்கன் வாங்கிட்டு வந்தாங்க. அப்போ நம்மளோட ரெகுலர் கஸ்டமர்கள்… கோழியோட சிக்கன் மசாலாவும் தயார் பண்ணினா அதையும் வாங்கிக்கிறதா சொன்னாங்க. 

அப்ப நாங்களும் எங்க குடும்பத்துல கூடி ஆலோசிச்சோம். என் அண்ணன் யுவராஜ் எம்பிஏ படிச்சிருக்கார். 

ஏற்கனவே கோழி பிசினஸ் நல்லா நடந்துகிட்டு இருக்குற நிலையில, 2023  மசாலா பொடிகள்  தயாரிச்சி விற்கலாம்னு முடிவு பண்ணி ஆரம்பிச்சோம். 

எங்க அப்பா  பேர்ல சுந்தரம் அக்ரோ ஃபுட் என்ற கம்பெனி ஆரம்பிச்சு… எங்க அம்மா பேரையே பிராண்ட் ஆக்கினோம். ஆமா…  பொம்மு மசாலா என  பெயர் வைத்தோம். 

அப்பாவும் அம்மாவும் தான் நமக்கு எல்லாமே அடிப்படை. அதனால அவங்களோட பெயர்லையே எங்க பிசினஸ் ஆரம்பிச்சோம். 

மசாலா போடுவதற்காக தரமான விலை பொருட்களை கர்நாடகா வரைக்கும் போய் வாங்கிட்டு வந்து,  உணவுப் பொருள் தயாரிப்பு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இந்த மசாலா பொடியத் தயாரிச்சு சப்ளை பண்றோம். இப்போ தமிழ்நாடு முழுசும் பொம்மு மசாலா வெற்றிகரமா சப்ளை ஆகிக்கிட்டு இருக்கு. 

எங்ககிட்ட 30 பேர் வேலை பாக்குறாங்க. சேந்தமங்கலத்தில் ஹெட் ஆஃபீஸ் வச்சிருக்கோம்.  மசாலா உற்பத்தி ஃபேக்டரிய எங்களுடைய மேல பட்டியில இருக்கிற சொந்த இடத்தில் வச்சிருக்கோம்.

எந்தத் தொழில் செய்தாலும் அடிப்படை நேர்மை முக்கியம். எங்களுடைய நேர்மையான வரவு செலவு கணக்கு பாத்துட்டு தான் பேங்க்ல இருந்து லோன் கொடுக்க முன் வந்தாங்க. பேங்கில் வாங்கிய லோனை டியூ டேட்டுக்கு முன்பே கரெக்டா கட்டிடுவோம். அதேபோல எங்கள் ஊழியர்களுக்கு ஐந்தாம் தேதி கரெக்டா சம்பளம் போட்டுருவோம்.

என்னுடைய மனைவி ஜீவா,  எங்க அண்ணி  சகுந்தலா.  குடும்பத்துல எல்லாரும் சேர்ந்து இந்த நிறுவனத்துக்காக உழைக்கிறோம்.

காலை ஐந்து மணிக்கு எழுந்து இரவு 11 மணி வரை இந்த வேலைகளை பார்ப்போம். இப்போ அடுத்த கட்டமா ஃபிஷ் பிசினஸ்லையும் இறங்கி இருக்கோம்” என்று தங்களின் பிசினஸ் வரலாற்றை அழகாக சொன்ன சத்தியராஜ்…

தனக்கு எல்லா காலங்களிலும் லாபம் கொடுத்து வரும் இந்த சமுதாயத்துக்கு… கொரோனா ஊரடங்கு காலங்களில் மிகுந்த உதவி செய்திருக்கிறார். 

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 3 லட்சம் பேருக்கு கபசுர குடிநீர் விநியோகம் செய்திருக்கிறார் சத்தி  பிராய்லர்ஸ் சத்தியராஜ்.

அது மட்டுமல்ல சேந்தமங்கலம் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு தினந்தோறும் சிக்கன் பிரியாணி அளித்து ஊரடங்கு காலகட்டத்தில் அவர்களுக்கு புரோட்டின் சத்து அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள் சத்தி  பிராய்லர்  நிறுவனத்தினர்.  இன்றும் கூட உதவி தேவைப்படும் யாராக இருந்தாலும் அந்த உதவி நியாயமான உதவியாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக உதவுகிறார்.

அடிப்படை  நேர்மையும், சமுதாயத்தின் மீதான இயல்பான அக்கறையும் கொண்டு வெற்றிகரமான பிராய்லர் மற்றும் மசாலா பிசினஸ் செய்து வரும் சத்தியராஜ், யுவராஜ் குடும்பத்தினரை நமது வாசகர்கள் சார்பில் வாழ்த்துவோம்.

Previous Post

தொழிலதிபர் ராமசாமியின் வெற்றி மந்திரம்!

Next Post

பாளையக்காரர்கள்

  • டிரெண்டிங்
  • கருத்துகள்
  • சமீபத்திய
மலர்ந்தது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம்

மலர்ந்தது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம்

September 15, 2026
வீரபாண்டிய கட்டபொம்மனுக்குமுதல்வர் விஜய் செய்ய வேண்டியது என்ன?

வீரபாண்டிய கட்டபொம்மனுக்குமுதல்வர் விஜய் செய்ய வேண்டியது என்ன?

September 19, 2026
மாணவர்களை சாதிக்க வைத்து சாதனை செய்த ஆசிரியர்

மாணவர்களை சாதிக்க வைத்து சாதனை செய்த ஆசிரியர்

September 17, 2026
சிதைக்கப்பட்ட நடு கற்கள்…

சிதைக்கப்பட்ட நடு கற்கள்…

September 12, 2026
சர்வே FMB தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள்

சர்வே FMB தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள்

0
education

தொட்டிய நாயக்கர் சமூகமும் அவர்களின் கல்வி நிலையும்

0
kattapoman

பராமரிப்பின்றி கட்டபொம்மன் சிலை!

0
திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!

திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!

0
Engineering Central Government Job

இன்ஜினியரிங் முடித்த இளைஞர்களே… இதோ மத்திய அரசு வேலை வாய்ப்பு!

September 30, 2026
CSIR Technician Recruitment

மத்திய அரசின் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னீசியன் பணி – CSIR

September 30, 2026
M.P. Sadasivam speech

தொட்டிய நாயக்கர்கள் பார்வையாளர்களாக இருக்காமல் பங்கேற்பாளர்களாக களமிறங்க வேண்டும்! – தொட்டிய நாயக்கர் முரசு இணைய தள துவக்க விழாவில் எம்.பி. சதாசிவம் உரை!

September 30, 2026
வீட்டு வரி ரசீது, பட்டா இன்றி தவிக்கும் ரங்கம்மாள் பாட்டி..கை கொடுக்குமா அரசு?

வீட்டு வரி ரசீது, பட்டா இன்றி தவிக்கும் ரங்கம்மாள் பாட்டி..கை கொடுக்குமா அரசு?

September 29, 2026

தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் செய்திகள், வரலாறு, கலை, கலாச்சாரம் மற்றும் நிகழ்வுகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் ஒரு பிரத்யேக தளம்.

Whatsapp Facebook Instagram Youtube
instagram-1.png
facebook-1.png
youtube
முக்கிய இணைப்புகள்
  • எங்களைப் பற்றி
  • சமுதாய செய்திகள்
  • தொட்டிய நாயக்கர் வரலாறு
  • பிரபலங்கள்
  • சாதனையாளர்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
பிற இணைப்புகள்
  • சடங்கு & சம்பிரதாயம்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • சமூகப் பணி
  • பிறந்தநாள் வாழ்த்துகள்
  • திருமண வாழ்த்துகள்
  • இரங்கல் செய்திகள்
தொடர்புக்கு
  • +91 94870 66643
  • rajakambalammurasu@gmail.com
  • #2/48, ஊர்புறம் (வார்டு 2), போடிநாயக்கன்பட்டி (அஞ்சல்), சிங்களாந்தபுரம் (வழி), இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம் - 637 412, தமிழ்நாடு.
© 2026 தொட்டிய நாயக்கர் முரசு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
No Result
View All Result
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்

© 2018 JNews by Jegtheme.