விடுதலைப் போராட்ட வீரர் விருப்பாச்சி கோபால நாயக்கரின் நினைவு நாள் செப்டம்பர் 5ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
இதை ஒட்டி திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் விருப்பாச்சி கிராமத்தில் கோபால் நாயக்கர் மணிமண்டபத்தில் உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் துர்கா மூர்த்தி அவர்கள், திண்டுக்கல் உயர்திரு வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் உயர்திரு வட்டாட்சியர் உயர்திரு வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு சச்சிதானந்தம் அவர்களால் கோபால் நாயக்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் திரு சக்கரபாணி அவர்களும் கோபால நாயக்கர் திருவருவ சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
மேலும் தொட்டிய நாயக்கர் அமைப்பு நிர்வாகிகள், நாயக்கர் நாயுடு சங்கத்தினர் உள்ளிட்ட பல அமைப்புகளின் நிர்வாகிகள் விருப்பாச்சி கோபால நாயக்கரின் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தினர்














