|
Live
Engineering Central Government Job

இன்ஜினியரிங் முடித்த இளைஞர்களே… இதோ மத்திய அரசு வேலை வாய்ப்பு!

youtube
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
Live
Engineering Central Government Job

இன்ஜினியரிங் முடித்த இளைஞர்களே… இதோ மத்திய அரசு வேலை வாய்ப்பு!

  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
Home வரலாறு தொட்டிய நாயக்கர் வரலாறு

சிலிர்க்க வைக்கும் சீர் மரபினர் வரலாறு! தொடர் 1

நிர்வாகி by நிர்வாகி
September 10, 2026
in தொட்டிய நாயக்கர் வரலாறு, வரலாறு
A A
சிலிர்க்க வைக்கும் சீர் மரபினர் வரலாறு! தொடர் 1

சமுதாய முன்னோடிகளை சந்திப்போம்! 

விளாத்திகுளம் சுவாமிகள்

நமது சமுதாயம் பற்பல அதிசய மனிதர்களை நம் முன்னோர்களாக முன்னோடிகளாக நமக்காக அளித்துள்ளது. 

இப்படிப்பட்ட அசாதாரணமான ஆளுமைகளை அவர்களது வரலாற்றை அறிந்து கொள்வதற்காக, ‘சமுதாய முன்னோடிகளை சந்திப்போம்’  என்ற இந்த பகுதி வெளியிடப்படுகிறது. 

முதலில் இசை மகா சமுத்திரம் விளாத்திகுளம் சுவாமிகள்… 

நல்லப்ப சுவாமிகள் என்று அழைக்கப்பட்ட நல்லப்பசாமி பாண்டியன் அவர்கள் 24 -9 -1889 ஆம் நாளில் இன்றைய தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பிறந்தவர். 

இவரது  தந்தை வீரபாண்டிய கட்டபொம்மனுடன் நெருங்கிய உறவினரான காடல்குடி பாளையக்காரர் சோமசுந்தர ஜெகவீரஞ்ஜெய பாண்டியனாருக்கும் கோவம்மாள் அவர்களுக்கும் பிறந்த ஐந்தாவது புதல்வன் ஆவார். 

சுவாமிகளின் முன்னோர்கள் வெள்ளையரை எதிர்த்து நடத்திய போருக்குப்பின் விளாத்திகுளம் வந்து நிரந்தரமாக தங்கிவிட்டனர். 

சுவாமிகளுக்கு மனைவியர் மூவர். அவரது சகோதரியின் மகள் செல்லம்மாள் மூத்த மனைவி ஆவார். இரண்டாவது மனைவி பூசையம்மாள். மூன்றாவது மனைவி சென்னம்மாள் ஆவர். 

முதல் மனைவிக்கு சோமசுந்தரம் கண்ணுசாமி என்ற மகனும் மூன்றாம் மனைவிக்கு பாலம்மாள் என்ற பெண் வாரிசும் உண்டு.  இரண்டாம் மனைவிக்கு வாரிசு இல்லை.

 தோற்ற பொலிவு! 

ஆறடிக்கு குறையாத உயரம். கருத்த மேனி. ராஜ கலையான முகம். தீட்சண்யமான கண்கள். ஏறிய நெற்றியில் வாடாது நிறைந்த திருநீற்றுப்பூச்சு. கழுத்தில் ருத்ராட்ச மாலையும் கண்டத்தில் ஏக ருத்ராட்சமும் சுவாமி அணிந்திருப்பார். 

அடர்த்தியான அளவான வெள்ளை மீசை, வெள்ளை வேட்டி, மஞ்சள் நிற துண்டு, சில சமயங்களில் பச்சை நிறத்தில் பீதாம்பரம் அணிந்திருப்பார். 

பழுத்த ஆன்மீகவாதி. சிவப்பு நிற பட்டுத் துணியால் தைக்கப்பட்ட திருநீற்றுப் பை எப்போதும் அவரது மடியில் இருந்து கொண்டே இருக்கும். 

சுவாமிகள் தன் மனைவி குடும்பம் யாவற்றையும் துறந்து இசைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். கடைசி காலத்தில் ஒரு துறவி போல வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். 

சிவகிரி அருகில் மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் ஆசிரமம் அமைத்து தங்கலாம் என்ற நினைப்பில் ஏற்பாடுகள் செய்தார். அது சித்தியாகவில்லை. 76 ஆண்டுகாலம் வாழ்ந்த சுவாமிகள் 1965 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 25 ஆம் நாள் அமரரானார். 

பிறவிக் கலைஞர் 

கலைஞர்களையும் கவிஞர்களையும் யாரும் உருவாக்கி விடுவதில்லை.  அவர்கள்  அதற்கென்றே பிறக்கிறார்கள்.  முன் ஜென்மத்தில் எவ்வளவோ தவம் செய்தவர்களுக்கு தான் கலைஞராகப் பிறக்கும் பாக்கியம் கிடைக்கிறது. 

விளாத்திகுளம் சுவாமிகள் இசைஞானமும் அப்படி பிறக்கும்போதே உடன் கொண்டு வந்த ஒன்று.  பிள்ளை பருவத்தில் பள்ளிக்கு சென்று கல்வி கற்று வந்தார். 

காவடிச் சிந்து,  திருப்புகழ் முதலியவற்றை பாடுவதில் ஆர்வம் காட்டினார். சிறுவனாக இருக்கும்போது எங்கே இசை நிகழ்ச்சி நடந்தாலும் முதல் ஆளாக போய் உட்கார்ந்து விடுவது அவரது வழக்கம். 

பாளையக்கார குடும்பத்தை சேர்ந்தவர். அதனால், நல்ல மரியாதையும் வரவேற்கும் கிடைக்கும்.

சபையில் வித்வான் பாடிய பாட்டையும், கிரகங்களையும் கேட்டு அவற்றை உடனுக்குடன் சுவாமிகள் பாடிக் காட்டுவதைக் கண்டு எல்லாருமே ஆச்சரியப்படுவது உண்டு. அதிகாலையில் ஆற்றின் கரைக்கு சுவாமிகள் வந்து ராகங்களை ஆலாபனை செய்வதில் ஈடுபட்டு, இசையில் அசுர சாதகம் செய்து வந்தார். 

வாலிபப் பருவம் அடைவதற்குள்ளாகவே சபையில் அமர்ந்து கச்சேரி நடத்தும் அளவிற்கு இசை ஞானம் ஏற்பட்டுவிட்டது. பேச்சு, சிந்தனை, செயல்  அனைத்துமே அவர்களுக்கு இசை மயமாகவே இருக்கும். இரவில் நல்ல உறக்கத்தில் கூட வாய் ஏதாவது ஒரு ராகத்தை முணுமுணுத்துக் கொண்டிருக்கும். 

சுவாமி கோபப்பட்டு யாரும் பார்த்ததில்லை. கச்சேரியில் யாரும் ராகத்திலோ தாளத்திலோ தவறு செய்து விட்டால், கோபப்படாமல் கை சாடை மூலம் குற்றத்தை உணர்த்தி சரி செய்வார். 

எட்டையபுரத்தைச் சேர்ந்த சுப்புக்குட்டி அண்ணாவி என்பவர் ஓர் இசை விமர்சகர்.  மகா மகா வித்வான்கள் எல்லாம்  அவரைப் பார்த்தாலே லத்தி போடுவார்கள். அப்படி ஒரு கொடூரமான சங்கீத விமர்சகர். 

இந்த அண்ணாவி விளாத்திகுளம் சுவாமிகளை கண்டால் மட்டுமே எழுந்திருந்து வணங்குவார். 

பொழுது போகாமல் சுவாமியிடம் போய் சங்கீதம் பற்றி பேசிக்கொண்டு  இருந்து விட்டு வரலாம் என்று யாரும் போனால், முதலில், ‘ சாப்டாச்சா? ‘என்றுதான் கேட்பார். சாப்பிடவில்லை என்று சொன்னால் தன் விபூதி பையில் இருக்கும் அரை அணா, ஓரணாவை எடுத்து கொடுத்து முதலில் சாப்பிட்டு வா என்பார். 

சுவாமி அவர்களை கச்சேரி பண்ண அழைத்துப் போக சம்பந்தப்பட்ட முக்கியஸ்தர்கள் வருவார்களாம். சன்மானம் பற்றி பேச வேண்டும் என்று சுவாமி இடம் கேட்பார்கள். அப்போது அவர், “பக்கவாத்தியக்காரர்களாக இன்னார் இன்னாரை போடுங்கள். அவரவர்களுக்கு உரிய ஊதியங்களை நீங்கள் அவர் அவர்களிடம் கொடுத்து விடுங்கள்” என்பார். “உங்களுக்கு எவ்வளவு சாமி?” என்று வந்தவர்கள் கேட்டால், “பிரியப்பட்டு நீங்க கொடுக்கிறத  கொடுங்க… வாங்கிக்கிறேன்’ என்பார். 

கச்சேரி முடிந்தபின் அவருக்காக கொடுக்கப்படும் பணத்தை அவர் எண்ணியும் பார்ப்பதில்லை. தாள்களை பிரித்தும் கூட பார்ப்பதில்லை.  அப்படியே சுருட்டி அந்த திருநீற்றுப் பையில் வைத்துக் கொள்வார். மறுநாள் யாரும் கஷ்டப்படுவது போல தெரிந்தால் அதிலிருந்து ஒரு  தாளை உருவி அப்படியே கொடுத்துவிடுவார். மீதம் பையில் எவ்வளவு இருக்கிறது என்று தெரிந்து கொள்வதே இல்லை. சுவாமி ரொம்ப இரக்க குணம் கொண்டவர். 

திரைப்பட நடிகர் எம். கே .தியாகராஜ பாகவதர், நாகஸ்வர சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை, அங்கு விலாஸ் திரு. முத்தையா பிள்ளை, சேலம் குலாலர் சங்கத்தார் போல பலரும் நல்லப்ப சுவாமிக்கு பொருளும் பணமும் மதிப்பும் தந்து போற்றியிருக்கிறார்கள். 

ஆற்றங்கரை ஜமீன்தார் பெத்தண்ணல்  பூபதி என்பவர் சுவாமிகளுக்கு இருபது ஏக்கர் நிலத்தை அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார். 

சுவாமிகளின் இசைஞானம் முறைப்படி அமைந்து பிரகாசிப்பதற்கு பேருதவியாக இருந்த பெருமை ராஜமன்னார்குடி நாகஸ்வர மாமேதை சின்னப்பக்கிரி பிள்ளையை சேரும். 

அக்காலத்திய மகா வித்வான்கள் பலர் சுவாமிகளின் இசைஞானத்தை பெரிதும் பாராட்டி முன்னணிக்கு கொண்டுவர  முயற்சித்துள்ளார்கள். மகாவித்வான் கோனேரிராஜபுரம் வைத்தியநாதய்யர்​ தாம் கச்சேரி செய்யும் இடங்களில் சுவாமிகளை பார்த்து பெரும் மகிழ்ச்சியுடன் பாடுவார். இருவருக்கும் குரு -சிஷ்ய பாவம்தான் நிலவியது.

இருப்பினும் சுவாமிகளின் பெருமையை நாடறிய செய்ய வேண்டும் என்பதற்காக தம் கச்சேரி முடிந்ததும், சுவாமிகளை மேடையில் அமர்த்தி பாடச் சொல்லி ரசிப்பதுண்டாம். 

விளாத்திகுளம் நல்லப்ப சுவாமிகளை கோவில்பட்டியில் வாழ்ந்த பிரபல நாகஸ்வர கலைஞர் காருக்குறிச்சி அருணாச்சலம் அவர்கள் தனது இசை குருவாகவே போற்றி வந்தார். 

தொடரும் 

(என். ஏ. எஸ். சிவக்குமார் தொகுத்த இசை மகா சமுத்திரம் விளாத்திகுளம் சுவாமிகள்  என்ற நூலில்  தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி அ. முத்தானந்தம் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி)

Previous Post

பாளையக்காரர்கள்

Next Post

விருப்பாச்சி கோபால் நாயக்கர்

  • டிரெண்டிங்
  • கருத்துகள்
  • சமீபத்திய
மலர்ந்தது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம்

மலர்ந்தது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம்

September 15, 2026
வீரபாண்டிய கட்டபொம்மனுக்குமுதல்வர் விஜய் செய்ய வேண்டியது என்ன?

வீரபாண்டிய கட்டபொம்மனுக்குமுதல்வர் விஜய் செய்ய வேண்டியது என்ன?

September 19, 2026
மாணவர்களை சாதிக்க வைத்து சாதனை செய்த ஆசிரியர்

மாணவர்களை சாதிக்க வைத்து சாதனை செய்த ஆசிரியர்

September 17, 2026
சிதைக்கப்பட்ட நடு கற்கள்…

சிதைக்கப்பட்ட நடு கற்கள்…

September 12, 2026
சர்வே FMB தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள்

சர்வே FMB தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள்

0
education

தொட்டிய நாயக்கர் சமூகமும் அவர்களின் கல்வி நிலையும்

0
kattapoman

பராமரிப்பின்றி கட்டபொம்மன் சிலை!

0
திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!

திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!

0
Engineering Central Government Job

இன்ஜினியரிங் முடித்த இளைஞர்களே… இதோ மத்திய அரசு வேலை வாய்ப்பு!

September 30, 2026
CSIR Technician Recruitment

மத்திய அரசின் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னீசியன் பணி – CSIR

September 30, 2026
M.P. Sadasivam speech

தொட்டிய நாயக்கர்கள் பார்வையாளர்களாக இருக்காமல் பங்கேற்பாளர்களாக களமிறங்க வேண்டும்! – தொட்டிய நாயக்கர் முரசு இணைய தள துவக்க விழாவில் எம்.பி. சதாசிவம் உரை!

September 30, 2026
வீட்டு வரி ரசீது, பட்டா இன்றி தவிக்கும் ரங்கம்மாள் பாட்டி..கை கொடுக்குமா அரசு?

வீட்டு வரி ரசீது, பட்டா இன்றி தவிக்கும் ரங்கம்மாள் பாட்டி..கை கொடுக்குமா அரசு?

September 29, 2026

தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் செய்திகள், வரலாறு, கலை, கலாச்சாரம் மற்றும் நிகழ்வுகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் ஒரு பிரத்யேக தளம்.

Whatsapp Facebook Instagram Youtube
instagram-1.png
facebook-1.png
youtube
முக்கிய இணைப்புகள்
  • எங்களைப் பற்றி
  • சமுதாய செய்திகள்
  • தொட்டிய நாயக்கர் வரலாறு
  • பிரபலங்கள்
  • சாதனையாளர்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
பிற இணைப்புகள்
  • சடங்கு & சம்பிரதாயம்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • சமூகப் பணி
  • பிறந்தநாள் வாழ்த்துகள்
  • திருமண வாழ்த்துகள்
  • இரங்கல் செய்திகள்
தொடர்புக்கு
  • +91 94870 66643
  • rajakambalammurasu@gmail.com
  • #2/48, ஊர்புறம் (வார்டு 2), போடிநாயக்கன்பட்டி (அஞ்சல்), சிங்களாந்தபுரம் (வழி), இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம் - 637 412, தமிழ்நாடு.
© 2026 தொட்டிய நாயக்கர் முரசு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
No Result
View All Result
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்

© 2018 JNews by Jegtheme.