|
Live
Engineering Central Government Job

இன்ஜினியரிங் முடித்த இளைஞர்களே… இதோ மத்திய அரசு வேலை வாய்ப்பு!

youtube
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
Live
Engineering Central Government Job

இன்ஜினியரிங் முடித்த இளைஞர்களே… இதோ மத்திய அரசு வேலை வாய்ப்பு!

  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
Home செய்திகள் சமுதாய செய்திகள்

தொட்டியநாயக்கர் முரசு… பத்திரிகை கடந்து வந்த பாதை!  வரலாற்றை திரும்பிப் பார்த்த ஆசிரியர்  கொ.நாகராஜன்

நிர்வாகி by நிர்வாகி
September 22, 2026
in சமுதாய செய்திகள், செய்திகள்
A A
Pathirikai Kadandhu Vandha Paadhai

தொட்டியநாயக்கர் முரசு இணையதள துவக்கவிழாவில்  தொட்டியநாயக்கர் முரசு ஆசிரியரும், விடுதலைக் களம் கட்சியின் நிறுவனருமான திரு. கொ.நாகராஜன் தலைமை உரை நிகழ்த்தினார்.    

அவரது முழு உரை பின் வருமாறு…

“இன்றைக்கு தொட்டியநாயக்கர் முரசு இணையதள துவக்க விழாவிற்கு வருகை தந்திருக்கின்ற ஐயா எம்பி சதாசிவம் ஐயா அவர்களையும்… சிவசுப்பிரமணியம் ஐயா அவர்களையும் மற்றும் மூத்த பத்திரிகையாளர் ஐயா ஆரா அவர்களையும் மற்றும் அண்ணன் ஜோதிபாசு அவர்களையும் மற்றும் இங்கே வருகை தந்திருக்கின்ற உப்பிலிய  நாயக்கர் சங்கத்துடைய மாநிலத் தலைவர் ஐயா வெங்கடாஜலம் மற்றும் புதியவாழ்க்கை கட்டிடத் தொழிலாளர் சங்கத்தினுடைய பொதுச்செயலாளர் அண்ணன் மாணிக்கம் அவர்களையும்,  எங்களுடைய தொட்டிய நாயக்கர்  முரசை வடிவமைத்து கொடுத்த ஐயா  தங்கம்  பிரிண்டர்ஸ் உரிமையாளர்  தனசேகரன் ஐயா அவர்களுக்கும், மேல் அட்டை டிசைன் செய்த சுருதி பிரிண்டர்ஸ் நவநீதன்  மற்றும் நம்முடைய சொந்தங்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

2004ஆம் ஆண்டு விடுதலைக் களம் அமைப்பை துவங்கினோம்.  விடுதலைக் களம் அமைப்பு துவங்கப்பட்ட காலகட்டத்தில் இந்த இயக்கத்திற்கு ஒரு பத்திரிக்கை வேண்டும் என்று  நானும் அண்ணன் நல்வினை விசுவராஜ் அவர்களும் தொடர்ந்து விவாதித்து பேசிக்கொண்டே இருப்போம்.

அப்பொழுது தினமும் ஒரு பெயரை தேர்வு செய்வோம்.  தொட்டிய நாயக்கர் குரல், தொட்டிய நாயக்கர் முரசு இது போன்ற பெயர்களை எல்லாம் நாங்கள்  தேர்வு செய்து கொண்டு…   அப்போதைய அமைப்பின் அழைப்பிதழ்களிலே கீழே விரைவில் வெளியாகிறது தொட்டிநாயக்கர் முரசு என்று அறிவித்துக் கொண்டிருந்தோம்.

ஐயா எம்பி சதாசிவம் அவர்கள்,  அப்பொழுது அவர்  எங்களிடத்தில் ஒரே ஒரு வார்த்தை சொன்னார்…  ‘நீங்க என்ன நோட்டீஸ்லயே  தொட்டியநாயக்கர் முரசு வருது தொட்டிநாயக்கர் முரசு வருகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.  ஆனால் அந்த பத்திரிக்கை ஏன் வெளியிலே கொண்டு வரவில்லை?  2005 செப்டம்பர் 5ஆம் தேதி என்னுடைய மகனுக்குத் திருமணம். அந்த திருமண விழாவிலே இந்த பத்திரிக்கையை நீங்கள் வெளிக்கொண்டு வர வேண்டும் என்று ஒரு 300 திருமண பத்திரிக்கைகளை அடித்து எங்களிடத்திலே கொடுத்து…  விடுதலை களத்தில் இருக்கிறவர்கள் பெயர்களை எல்லாம் அதிலே அச்சிட்டு நீங்கள் 300 பேரை அழைத்து வாருங்கள்.

என்னுடைய இல்ல திருமண விழா மண்டபத்திலேயே அந்த பத்திரிக்கையை வெளியிட்டு விடுவோம் என்று எங்களிடம் சொன்னார்கள்.

அதனுடைய அடிப்படையில் 2005ஆம் ஆண்டு முதல் பத்திரிகையாக அவரது இல்ல திருமண விழாவிலே தொட்டிநாயக்கர் முரசு முதல் பத்திரிகை வெளிவந்தது.

முதல் மாதம் ஆயிரம் புக் அடித்துவிட்டோம்.  அதை எப்படி மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்துவது என மிகப்பெரிய ஒரு எங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது.  ஒவ்வொரு கிராமமாக அந்த பத்திரிக்கையை தூக்கிக்கொண்டு நாங்கள் போனோம். அடுத்தடுத்த மாதம் செய்திகளை ரெடி செய்வது அதற்கான நிதியினை தயார் செய்வது என்று மிகப்பெரிய ஒரு பணியாக அது அமைந்தது.

Pathirikai Kadandhu Vandha Paadhai Img 01

2006 ஆம் ஆண்டு வரை இந்த மாவட்டத்துக்குள்ளே மட்டும் இந்த பத்திரிக்கையை 170 கிராமங்களுக்குள்ளே கொண்டு செல்வதற்கான பணியினை செய்தோம்.  அதிலே நிறைய சிரமங்கள் நிறைய கஷ்டங்கள் இருந்தது.

என்னிடத்தில் வண்டி வாகனங்கள் எதுவும் கிடையாது. நடந்தும் சைக்கிள்லயும் போய் ஒவ்வொரு கிராமமாக அந்த பத்திரிக்கையை கொண்டு போனோம்.  அதை அச்சடித்துக் கொடுத்த அண்ணன் தங்கம் பிரிண்டர்ஸ் உரிமையாளர் இங்கே வருகை தந்திருக்கின்றார். அவர்தான் தொடர்ந்து ஒரு ஏழு- எட்டு ஆண்டுகள் இந்த பத்திரிக்கையை வடிவமைத்து ஒவ்வொரு மாதமும் எங்களுக்கு கொடுத்தார்.

இந்த பத்திரிக்கையை அடுத்த கட்டமாக ஈரோடு மாவட்டத்திற்கு கொண்டு சென்றோம்.  அடுத்ததாக கோவை மாவட்டம் திருப்பூர் என கொண்டு சென்றோம்.   பத்திரிகைக்கு சந்தா சேர்த்தோம். பத்திரிகைப்  பதிவு உட்பட ஒவ்வொரு விஷயத்தையும்  நாமளே கீழ விழுந்து மேல எழுந்து அதை கண்டுபிடிக்க வேண்டிய ஒரு கட்டாயத்திலே அந்த பத்திரிக்கை வெளிவந்தது.

கட்டுரைகள் எழுதுவதற்கு அண்ணன் சதாசிவத்தின் உதவியை நாடி சேலத்துக்கு போவோம். மாமாங்கம் அப்படிங்கிற இடத்தில அவருடைய அலுவலகம் இருக்கும் நான்  மாசத்துக்கு 10 நாள் அங்கே போய் அவரிடத்திலே கட்டுரைகளை வாங்கி வருவோம்.

பல்வேறு சொந்தங்களும் அந்த கட்டுரைகளை அனுப்புவார்கள் அதையெல்லாம் கொடுத்து திருத்தி அதை இது மாதிரி ஒரு கலர் ரெண்டு கலர்ல அந்த பத்திரிக்கையை வெளிக்கொண்டு வந்தோம். அதன் பின் அதை மல்டி கலர் பத்திரிகையாக மாற்றினோம்.

2008 ஆம் ஆண்டு தொட்டிய நாயக்கர் முரசின் நான்காம் ஆண்டு சிறப்பிதழாக  வாழ்த்து செய்தி கேட்டு மருத்துவர் ராமதாஸ் ஐயா,  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நாம் தொடர்பு கொண்டோம். வைகோ அவர்கள்  இரண்டு பக்கம் வாழ்த்து செய்தி தந்தார்.

தொட்டிய நாயக்கர் முரசு எனும் மாத இதழ் நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் செய்தி கேட்டு என் உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.  விடுதலைக்களம் அமைப்பையும் தொட்டியநாயக்கர் முரசு மாத இதழையும் மாற்றாரும் போற்றுகின்ற விதத்தில் நடத்தி வருகிற ஆசிரியர் சகோதரர் கொ. நாகராஜன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஒரு வீர சமூகத்தின் பெருமைகளையும் ஒரு வீர வேந்தனின் வரலாற்றையும் நாட்டு மக்களுக்கு ஏட்டின் மூலம் எடுத்துச் செல்கிற பணி என்பது பெற்ற தாய்க்கு மகன் செய்கின்ற பணிவிடைக்கு ஒப்பானதாகும்.

மன்னிப்பு தாருங்கள் என்று ஒரே ஒரு வார்த்தையை மாவீரன் கட்டபொம்மன் அன்றைக்கு உச்சரித்திருந்தால் மகுடம் தரித்த மன்னனாக   தொடர்ந்து பாஞ்சை   திருநாட்டை ஆண்டு இருக்கலாம்.  அவன் சாம்ராஜ்யம் வெள்ளையர்களால் களவாடப்பட்டிருக்காது.  

 அடிமையாய் வாழ்வதை விட வீரனாய் சாவதே மேல் என்ற உணர்ச்சியை உள்ளத்திற்குள்    வைத்து தூக்கு கயிற்றை துச்சம் என மதித்து மரணத்தை மகிழ்வோடு கட்டபொம்மன்  ஏற்றுக்கொண்டதால் தான் தமிழன் என்பவன் தன்மானத்தின் அடையாளமானவன் என்பதை உலகம் உலகத்திற்கு உணர்த்தியது.

புலி பதுங்குவது பாய்வதற்குதான் என்பார்கள்.  அந்த புலியை போல் பதுங்கி படை திரட்டி வெள்ளையர்களை போர்க்களத்தில் வீழ்த்த நினைத்த கட்டபொம்மன்  பகைவர்களால் காட்டி கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுதூக்கு கயிற்றுக்கு முன்னால் நின்று கொண்டு அந்நியன் முன்னே கைதாகி நிற்கவும் அவனை அவன் அளித்த தீர்ப்புப்படி புளியமரத்தில்  தொங்கி…  கும்பனி படையோடு மோதி அப்போரில் மரணத்தை சந்திக்கவும் மகத்தான பாக்கியத்தை இழந்துவிட்டேனே என்றுஎன்றுதான் வருந்துகிறேன் என்று வீரமுழக்கமிட்டவாறு   மரணத்தை எதிர்கொண்டான்.

அது எல்லோராலும் முடிகிற காரியமா? இது மாதிரி தொடர்ந்து அந்த வாழ்த்து செய்தியிலே அவர் கூறியிருந்தார்.

Pathirikai Kadandhu Vandha Paadhai Img 02

வைகோ மட்டுமல்ல ஐயா சதாசிவம் அவர்கள்  மூலம்,  பலமுறை மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்களை தைலாபுரம்  தோட்டத்திலே நான் சந்தித்திருக்கின்றேன்.  நானும் அவரும் அண்ணன் நல்வினை வில்வராஜ் மூணு பேர் மட்டும் அவரை சந்திப்போம்.  பல முறை சந்தித்திருக்கிறோம்.  டாக்டர் ஐயா அவர்களே  என்னை இரண்டு முறை தொலைபேசியில் அழைத்து தோட்டத்துக்கு வா என்று அழைத்தார்.  அவரை போய் சந்தித்தேன்.

அவர் என்னை பார்க்கிற பொழுதெல்லாம் முதலில் அவர் வார்த்தை என்னவென்றால்… ‘ தொட்டிநாயக்கர்  முரசு எப்படி வருகின்றது?  எத்தனை பிரதிகள் சமுதாய மக்களிடத்தில் செல்கிறது?  எக்காரணத்தை கொண்டும் தொட்டிநாயக்கர் முரசை நீங்கள் நிறுத்தி விடாதீர்கள்’ என்று என்று மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்கள் சந்திக்கின்ற பொழுதெல்லாம் இந்த பத்திரிக்கையை பற்றி  பேசாமல் அவர் இருக்க மாட்டார்.  

நாங்கள் முதல் முதலாக பொள்ளாச்சியில் ஒரு மாநாடு நடத்தினோம். அரங்கம் நிரம்பி வழிந்தது.   அடுத்த கட்டம் நாமக்கல்லில திறந்தவெளி  மாநாடு…  அப்போ வந்து பேஸ்புக் கிடையாது வாட்சப்  கிடையாது, யு ட்யூப் கிடையாது. ஒரு சாதனமும் கிடையாது. அரவக்குறிச்சி முதல் குஜிலியம்பாறை வரைக்கும் இந்த பத்திரிகையை கொண்டு செல்ல நடந்தே போயிருக்கிறேன். ஈச்சநாரியிலே  இருந்து கோயம்புத்தூர் வரை  நடந்து போயிருக்கறோம்.  அந்தியூரிலிருந்து சத்தியமங்கலம் வரைக்கும்  நடந்து போயிருக்கிறோம். நம்ம சமுதாய மக்கள் அதிகமாக இருக்கிற ஈரோடு மாவட்டம்.

இந்த பத்திரிக்கை எல்லாருக்கும் போய் சேர்ப்பதற்கு யாரு காரணம்னா ஈரோடு எடுத்துக்கிட்டா சண்முகம்,  முத்துசாமி ரெண்டு பேர் எல்ஐசி ஏஜென்ட்.  திருச்செசங்கோடு எடுத்துக்கிட்டா அவர் ஒரு எல்ஐசி ஏஜென்ட்.

எல்ஐசி  ஏஜெண்டுகள் காலையில ஆறு  மணிக்கே  வசூலுக்கு போவாங்க.  வண்டியில் என்னையும் பின்னால உட்கார வச்சிக்கிட்டு கிராமம் கிராமமாக நம்மளை கொண்டு போய் சேர்த்தவர்கள் எப்போதும் நமது நன்றிக்குரியவர்கள்.

இப்படியாக தொட்டிய நாயக்கர் முரசுவை  கொண்டு போய் சேர்த்ததனுடைய விளைவு 2009ஆம்  ஆண்டில்…  நாமக்கல்லில் நாம் கூட்டிய தொட்டிய நாயக்கர் வாழ்வுரிமை மாநாட்டில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொட்டிய  நாயக்கர் சொந்தங்கள்  திரண்டு வந்தனர்.  அன்று நாமக்கல் நகரமே  நமது கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

Pathirikai Kadandhu Vandha Paadhai Img 03

கரூரிலிருந்து 200க்கு மேற்பட்ட வாகனங்கள், ஈரோட்டிலிருந்து 300- 400 மேற்பட்ட வாகனங்கள்,  நாமக்கல் மாவட்டத்திலே ஒரு 300- 400க்கு மேற்பட்ட வண்டி வாகனங்கள், ஆயிரக்கணக்கான டூவீலர்கள். நாமக்கல் நகரமே ஸ்தம்பிச்சு போச்சு.  இதற்கு ஒரே காரணம், இந்த தொட்டிய நாயக்கர் முரசு பத்திரிகைதான்.  

அடுத்த மாநாடு  2009  இல்,ஆப்பக்குடல் சுகர் மில்லுக்கு முன்னால இருந்து சுக்காநாயக்கனூர்  வரைக்கும் பேரணியாக சென்றோம். 5 கிலோமீட்டர் தூரத்துக்கு நம்முடைய சமூகத்தினுடைய குரலாக இந்த தொட்டிய நாயக்கர்  முரசுதான்  நம் சமுதாயத்தினரிடம் கொண்டு போய் சேர்த்தது.  

அடுத்து ஈச்சுநாரியிலே மாநாடு…  அங்கேயும் பல்லாயிரக்கணக்கான  மக்கள்.  விருதுநகரில்  20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற மாநாடு.

இத்தனை மாநாடுகளையும் வெற்றிகரமாக நடத்துவதற்கு  அடித்தளமாக இருந்தது இந்த தொட்டிநாயக்கர்  முரசு.

நமக்கு முன்னால்  க.சுப்பு, ராஜகம்பளம் முரசு  என  பத்திரிகை நடத்தினார்.   சங்கரவேல் ஐயா  வீரபாண்டிய கட்டபொம்மன் பத்திரிக்கை நடத்தினார். அதெல்லாம்  தற்பொழுது  நின்று போச்சு.

இப்படிப்பட்ட நிலையில்தான்…  நம்முடைய தொட்டிய நாயக்கர் முரசு பத்திரிக்கை மீண்டும் நம்முடைய செய்திகளை  கொண்டு போய் சேர்க்க தொழில் நுட்ப ஆதரவோடு தொட்டிநாயக்கர் முரசு என்கிற  வெப்சைட், யு ட்யூப்  சேனலை  தொடங்கி இருக்கிறோம்.

தொட்டிய நாயக்கர் முரசு பத்திரிகையை நடத்துவதற்கு உதவிய அத்தனை பேரையும் இந்த மேடையில் நான் நன்றியுடன் நினைவுகூறுகிறோம்

இப்போது மீண்டும் உங்கள் ஆதரவை நாடி தொட்டியநாயக்கர் இணையதளமாக விஞ்ஞானத்தின் குழந்தையாக  உங்கள் கைகளில் தவழ்கிறது.

தொட்டிய நாயக்கர் சமுதாய மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு,  அரசியல் வாழ்வை உயர்த்திட தொடர்ந்து செயல்படுவோம். உங்கள் ஒத்துழைப்பை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்” என்று தலைமையுரை ஆற்றினார்  ஆசிரியர் கொ.நாகராஜன்.

Previous Post

இனி வேண்டாம் மினிமம் பேலன்ஸ் கவலை! இதோ BSBD அக்கவுண்ட்!

Next Post

ஒழுக்கமும் நெறியும் மிக்க தொட்டிய நாயக்கர் சமுதாயம்: ஊடகவியலாளர் சிவசுப்ரமணியன் உரை!

  • டிரெண்டிங்
  • கருத்துகள்
  • சமீபத்திய
மலர்ந்தது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம்

மலர்ந்தது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம்

September 15, 2026
வீரபாண்டிய கட்டபொம்மனுக்குமுதல்வர் விஜய் செய்ய வேண்டியது என்ன?

வீரபாண்டிய கட்டபொம்மனுக்குமுதல்வர் விஜய் செய்ய வேண்டியது என்ன?

September 19, 2026
மாணவர்களை சாதிக்க வைத்து சாதனை செய்த ஆசிரியர்

மாணவர்களை சாதிக்க வைத்து சாதனை செய்த ஆசிரியர்

September 17, 2026
சிதைக்கப்பட்ட நடு கற்கள்…

சிதைக்கப்பட்ட நடு கற்கள்…

September 12, 2026
சர்வே FMB தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள்

சர்வே FMB தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள்

0
education

தொட்டிய நாயக்கர் சமூகமும் அவர்களின் கல்வி நிலையும்

0
kattapoman

பராமரிப்பின்றி கட்டபொம்மன் சிலை!

0
திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!

திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!

0
Engineering Central Government Job

இன்ஜினியரிங் முடித்த இளைஞர்களே… இதோ மத்திய அரசு வேலை வாய்ப்பு!

September 30, 2026
CSIR Technician Recruitment

மத்திய அரசின் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னீசியன் பணி – CSIR

September 30, 2026
M.P. Sadasivam speech

தொட்டிய நாயக்கர்கள் பார்வையாளர்களாக இருக்காமல் பங்கேற்பாளர்களாக களமிறங்க வேண்டும்! – தொட்டிய நாயக்கர் முரசு இணைய தள துவக்க விழாவில் எம்.பி. சதாசிவம் உரை!

September 30, 2026
வீட்டு வரி ரசீது, பட்டா இன்றி தவிக்கும் ரங்கம்மாள் பாட்டி..கை கொடுக்குமா அரசு?

வீட்டு வரி ரசீது, பட்டா இன்றி தவிக்கும் ரங்கம்மாள் பாட்டி..கை கொடுக்குமா அரசு?

September 29, 2026

தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் செய்திகள், வரலாறு, கலை, கலாச்சாரம் மற்றும் நிகழ்வுகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் ஒரு பிரத்யேக தளம்.

Whatsapp Facebook Instagram Youtube
instagram-1.png
facebook-1.png
youtube
முக்கிய இணைப்புகள்
  • எங்களைப் பற்றி
  • சமுதாய செய்திகள்
  • தொட்டிய நாயக்கர் வரலாறு
  • பிரபலங்கள்
  • சாதனையாளர்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
பிற இணைப்புகள்
  • சடங்கு & சம்பிரதாயம்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • சமூகப் பணி
  • பிறந்தநாள் வாழ்த்துகள்
  • திருமண வாழ்த்துகள்
  • இரங்கல் செய்திகள்
தொடர்புக்கு
  • +91 94870 66643
  • rajakambalammurasu@gmail.com
  • #2/48, ஊர்புறம் (வார்டு 2), போடிநாயக்கன்பட்டி (அஞ்சல்), சிங்களாந்தபுரம் (வழி), இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம் - 637 412, தமிழ்நாடு.
© 2026 தொட்டிய நாயக்கர் முரசு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
No Result
View All Result
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்

© 2018 JNews by Jegtheme.