தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகம், கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, துணை இயக்குனர், குடும்ப நல அலுவலகம், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய அலுவலகங்களில்… பின் வரும் வேலைவாய்ப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலையின் விவரம் தகுதிகள், வயது வரம்பு ஆகிய விவரங்கள் வருமாறு!
பணியின் பெயர் Lab Technician Gr-III
காலியிடங்கள்: 3
தகுதி: டிஎம்எல்டி முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.17,000
வயதுவரம்பு: 35-க்குள்
பணியின் பெயர் Occupational Therapist(DEIC)
காலியிடம் : 1
தகுதி: Occupational Therapy-ல் முதுகலைப் பட்டம்
சம்பளம்: மாதம் ரூ.23,000
வயதுவரம்பு: 40-க்குள்
பணியின் பெயர்: District Programme Manager
காலியிடம்: 1
தகுதி: பிஏஎம்எஸ் தேர்ச்சியுடன் கணினி அறிவு
சம்பளம்: மாதம் ரூ.42,000
வயதுவரம்பு: 59-க்குள்
பணியின் பெயர் RMNCH+ A Counseller (பெண்கள் மட்டும்)
காலியிடங்கள்: 2
தகுதி: Social Work,Public Administration, Psychology, Sociology, Home science, Hospital & Health Management பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம்
சம்பளம்: மாதம் ரூ.21,000
வயதுவரம்பு: 40-க்குள்
பணியின் பெயர்: Assistant Cum Data Entry Operator
காலியிடம் :1
தகுதி: ஏதாவதொரு இளநிலைப் பட்டம்- கணினி அறிவு. ஒரு ஆண்டு பணி அனுபவம்
சம்பளம்: மாதம் ரூ.17,500
வயதுவரம்பு: 35-க்குள்
பணியின்பெயர் ULB -UHN/ANM
காலியிடங்கள்: 75
தகுதி: + 2 தேர்ச்சியுடன் 2 ஆண்டு எஎன்எம் பயிற்சி
சம்பளம்: மாதம் ரூ.17,500
வயது வரம்பு: 35- க்குள்
பணியின் பெயர்: Cleaner
காலியிடங்கள்: 2
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.11,000
வயதுவரம்பு: 35-க்குள்:
எப்படி விண்ணப்பிப்பது?
htpps://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதை தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்து, விண்ணப்பப் படிவத்தில் தற்போதைய புகைப்படத்தை ஒட்டி கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
உறுப்பினர் செயலாளர்,
மாவட்ட காதார அலுவலர்,
மாவட்ட நலவாழ்வு அலுவலகம்,
219, ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர் -18.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 15.9.2026













