மத்திய அரசுத் துறையான அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், அசிஸ்டண்ட் கிளை போஸ்ட் மாஸ்டர் அல்லது Dak Sevaks பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுதும் 23 ஆயிரத்து 757 பணியிடங்கள், தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 118 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
மாத ஊதியம்: போஸ்ட் மாஸ்டர் – ரூ.12,000 – 29,380;
உதவி போஸ்ட் மாஸ்டர் அல்லது Dak Sevaks – ரூ.10,000- 24,470,
வயது வரம்பு: 18-40 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தகுதிகள்: உள்ளூர் மொழி (தமிழ்) தெரிந்திருக்க வேண்டும், கணினி அறிவு வேண்டும்; சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்ப விவரங்கள் காண மற்றும் விண்ணப்பிக்க இணையதளம்
https://www.indiapost.gov.in/gdsonlineengagement/pdf/descriptive-notification.pdf
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 21, 2026













